இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) இணைந்து மேற்கொள்ளும் சந்திரயான் 5 என்ற கூட்டு சந்திரப் பயணத்தை, பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜப்பானிய நாளிதழான தி யோமியோரி ஷிம்புன்னுக்கு அளித்த பேட்டியில், லூனார் போலார் எக்ஸ்ப்ளோரேஷன் (LUPEX) என்றும் அழைக்கப்படும் இந்தத் திட்டம் 2027-28 இல் தொடங்கப்படும் என்றும், சந்திரனின் தென் துருவப் பகுதியை ஆராய்வதில் கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தக் கூட்டு முயற்சியில், ஜாக்ஸா ஒரு ரோவரை உருவாக்கும், அதே சமயம் இஸ்ரோ ஒரு லேண்டரை உருவாக்கும் பொறுப்பை ஏற்கும்.
இந்தியா-ஜப்பான் கூட்டாக சந்திரயான் 5 திட்டத்தை மேற்கொள்ளும்
