சிங்கம் என்றால் காடுகளின் மன்னன்! முதலை என்றால் நீரின் தலைவன்! இந்த இரண்டு வேட்டையாளிகளும் நேரில் மோதும் போது நடக்கும் அதிசய காட்சிகளைச் சமூக வலைதளங்கள் தற்போது தீயாய் பகிர்ந்து வருகின்றன. இந்த வைரல் வீடியோவில், நான்கு சிங்கங்கள் ஒரு சிறிய முதலை சுற்றி நின்று அதனை வேட்டையாட முயல்கின்றன.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த முதலை தான் வலிமையாக தாக்கி, சிங்கங்களை சுறுசுறுப்பாக நகரவைக்கிறது. வீடியோவில், முதலை தனது கூரிய பல்ல்களைக் காட்டு முற்றிலும் சிங்கங்களை பதற வைத்துவிடுகிறது. திடீர் தாக்குதலால் குழம்பிய சிங்கங்கள் அதன் முன்னும் பின்னும் சுற்றி நடமாடத் தொடங்குகின்றன.
— Damn Nature You Scary (@AmazingSights) August 27, 2025
“>
பல நிமிடங்கள் வரை இந்த மனதை உலுக்கும் சண்டை தொடர்கிறது. ஆனால் இறுதியில், சிங்கங்களில் ஒன்று அந்த முதலையை திடீரென பிடித்து, முதல் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதை காணலாம். மற்ற சிங்கங்களும் இணைந்து அந்த முதலை சாய்த்து விடுகின்றன. இதுவரை 17,000க்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்று வைரலாகும் நிலையில் உள்ளது. இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.