2026ஆம் நிதி ஆண்டின் தேசிய பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் ஜப்பானின் அமைச்சரவையில் டிசம்பர் 26ஆம் நாள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஜப்பானிய நாடாளுமன்றம் 9 லட்சம் கோடி ஜப்பானிய யென் மதிப்புள்ள இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு வரவு செலவு வரலாற்றில் உச்ச நிலையை எட்டும்.
சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜப்பானின் வலது சாரி சக்திகள், இராணுவ வெறியை மீண்டும் தொடக்க முயல்வது குறித்து, சர்வதேச சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று 81.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
ஜப்பானிய தலைமை அமைச்சர் சனே தகைச்சி யசுகுனி கல்லறையில் பலமுறையாக அஞ்சலி செலுத்தினார். ஆக்கிரமிப்பு வரலாற்றை ஜப்பான் சரியாக திரும்பி பார்த்து, வரலாறு பற்றிய பிரச்சினை தொடர்பான பேச்சுகளிலும் செயல்களிலும் எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று சர்வதேச சமூகம் பலமுறையாக வற்புறுத்தியது. இது குறித்து, வரலாற்றுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஜப்பானின் மிக மோசமான செயல்களுக்கு இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த 87.7 விழுக்காட்டினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆசிய நாடுகளைச் சேர்ந்த 86.7 விழுக்காட்டினர் கூறுகையில், வரலாற்றைச் சரியாக கையாண்டால் தான், ஜப்பான் சர்வதேச சமூகத்துக்கு இயல்பாக திரும்ப முடியும் என்று தெரிவித்தனர்.
தவிரவும், ஜப்பானின் செயல்கள் தனது அமைதியான அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கடுமையாக மீறியுள்ளன என்று 78.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர். ஜப்பான் அரசு தனது நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், ஆசியாவின் அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று 85.4 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.
