ஆக்ஸியம் -4 விண்வெளிப் பயணத்திற்கு தயாராகிறார் சுபன்ஷு சுக்லா 

Estimated read time 1 min read

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லவிருக்கும் ஆக்ஸியம்-4 பயணத்திற்கு முன்னதாக இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த பயணம் ஜூன் 8 ஆம் தேதிக்கு முன்னதாகவே நடைபெறும் என எதிர்பார்ப்பதால், இந்த தனிமைபடுத்தல் கட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டுப் பணியில் ஆக்சியம் ஸ்பேஸ், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆகியவை அடங்கும்.
இந்திய விண்வெளி வீரர் ஒருவர் ISS-க்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்பதால் இது ஒரு வரலாற்று மைல்கல்லாக இருக்கும்.

You May Also Like

More From Author