அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்..!

Estimated read time 1 min read

தமிழக அரசியல் களத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வரும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் வந்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.

இசக்கி சுப்பையாவின் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.இசக்கி சுப்பையா முதலில் தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை வழங்கிய நிலையில், அது நிராகரிக்கப்பட்டு பின்னர் அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா.

என் தொகுதி மக்களின் நலன் கருதித்தான் இந்த முடிவு எடுத்துள்ளேன். இதுதொடர்பாக விரிவாக விளக்கமளிக்கிறேன்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா பேட்டி.

Please follow and like us:

You May Also Like

More From Author