இஸ்ரேல்-ஈரான் போர்: 40 நாட்களில் 17.5 பில்லியன் டாலர் இழப்பு  

Estimated read time 0 min read

ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள பூர்வாங்க மதிப்பீட்டின்படி, கடந்த 40 நாள் போருக்காக மட்டும் சுமார் 17.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.
இதில் ராணுவ நடவடிக்கைகள், ஆயுதங்கள் மற்றும் சிவிலியன் இழப்பீடுகள் என அனைத்தும் அடங்கும்.
இருப்பினும், இந்தத் தொகையில் போர் முடிவுக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புப் பணிகள் அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஏற்பட்டுள்ள மறைமுக இழப்புகள் கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author