2026 டாவோஸ் மன்றத்தின் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்த லிச்சியாங்

Estimated read time 1 min read

சீன தலைமையமைச்சர் லிச்சியாங் 24ஆம் நாள் பிற்பகல் டாலியானில் 2026ம் ஆண்டு டாவோஸ் மன்றத்தின் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதில் பங்கெடுத்த பிரதிநிதிகளின் உரைகளைக் கேட்டறிந்த பின், அவர் கூறுகையில், வர்த்தகப் போர், சுங்க வரிப் போர் முதலியவற்றில் வெற்றிபெற்ற தரப்பு என்று எதுவும் இல்லை என்றார். அதோடு, மென்மேலும் அதிகமான நாடுகள் ஒன்றுக்கு ஒன்று நலன்தந்து, கூட்டு வெற்றியைப் பெறும் சரியான திசைக்குத் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவின் தொழிற்துறை மானியம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளைக் கடுமையாகப் பின்பற்றுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு அதே அணுகுமுறை வழங்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பொருளாதாரம் புதிய நிலையில் சீராக வளர்ந்து வருகிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும். சீன அரசு, தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த சேவையை வழங்கி, மேலும் திறப்பான, நியாயமான, நட்பார்ந்த சூழலை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் 30க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author