ஐந்தாண்டு காணாத சரிவு! ஜூலையில் மந்தமடைந்த இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி! பின்னணி என்ன?  

Estimated read time 0 min read

இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மந்தமடைந்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது.
எச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள உற்பத்தித் துறை கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (பிஎம்ஐ) தகவலின்படி, கடந்த ஜூன் மாதத்தில் 54.2 ஆக இருந்த பிஎம்ஐ குறியீடு ஜூலை மாதத்தில் 53.5 ஆகக் குறைந்துள்ளது.
புதிய ஆர்டர்களின் வேகம் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தக் குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் நீடிப்பதால் இந்திய உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்தே வருகிறது.

You May Also Like

More From Author