புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், சேமிப்பை அதிகரித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நேரடியாகப் பயன் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
நாட்டின் மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்த சீர்திருத்தங்கள் ஜிஎஸ்டி பச்சத் உத்ஸவ் (ஜிஎஸ்டி சேமிப்பு விழா) என்ற புதிய தொடக்கத்தை அறிவிப்பதாகக் கூறினார்.
புதிய சீர்திருத்தங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகிதங்களைக் கொண்டுள்ளன.
உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு மற்றும் பற்பசை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இப்போது வரி விலக்கு பெற்றவை அல்லது 5% வரி அடுக்குகளில் வரும் என்று பிரதமர் தெரிவித்தார்.
உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
