சீன தேசியப் பாதுகாப்பு அமைச்சர் துங் ஜுன், 22ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க பிரதிநிதி அவை உறுப்பினர்கள் பிரதிநிதிக் குழுவைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று பங்காற்றி, கூட்டு செழுமையை நனவாக்கி, இரு நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் நன்மை பயக்கும் என்று அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டு பேசிய போது தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவப் படையுடன் இணைந்து சமநிலையில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, சமாதான, நிலையான உறவை உருவாக்க சீன ராணுவப் படை விரும்புகின்றது. அதே வேளையில், தேசிய இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றை சீன ராணுவப் படை உறுதியாக பேணிக்காக்கும் என்றார்.