தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உட்பட நான்கு நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சிபிஐ விசாரணை கோரிய பொதுநல மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அதே நாளில் நாமக்கல்லில் நடந்த பிரச்சாரத்தின்போது, திரையரங்கம் அருகேயுள்ள மருத்துவமனை மீது தவெகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
