சீனாவில் நிறைமாத கர்ப்பிணியை விமானத்தில் பயணம் செய்ய ஊழியர்கள் மறுத்ததால், அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
நிறைமாத கர்ப்பிணிகள் பொதுவாக விமானப் பயணங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் 33 முதல் 36 வாரங்களுக்கு இடையில் பயணம் செய்யச் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கின்றன.
இந்நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திபெத் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது விமானத்தில் இருந்த 36 மாத நிறைமாத கர்ப்பிணியை விமான ஊழியர்கள் பயணிக்க அனுமதி மறுத்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பெண் கீழே இறங்க மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் நிறைமாத கர்ப்பிணியையும், அவரது கணவரையும் விமானத்தில் இருந்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், சுமார் ஒருமணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
