கோவைக்கு ஜாக்பாட்! தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் இன்று திறப்பு  

Estimated read time 1 min read

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் இன்று (அக்டோபர் 9, 2025) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.
இந்த மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இந்த மேம்பாலத்திற்குப் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு, கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் தற்போதைய மிக நீளமான மதுரை – நத்தம் மேம்பாலத்தை (7.3 கிமீ) விட நீண்டதாகும்.
இந்த மேம்பாலம் நாட்டிலேயே 3வது மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையையும் பெறுகிறது.

You May Also Like

More From Author