குடும்பத்தில் ஒருத்தரை இழந்த மாதிரி இருக்கு! பாரதிராஜா மறைவால் முக்கிய முடிவை தள்ளிவைத்த லாரன்ஸ்!

Estimated read time 1 min read

சென்னை : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் த.வெ.க சார்பாக போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாகத் தீயாய் செய்திகள் பரவி வந்தன. இந்த அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாளை (ஜூன் 11) தனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதால், ராகவா லாரன்ஸ் தனது அந்த முக்கிய அறிவிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உருக்கமாகப் பதிவிட்டுள்ளதாவது:

“ஜூன் 11-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். ஆனால், இயக்குநர் இமயம் பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் தற்போது ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்தத் துயரமான சூழ்நிலை மற்றும் இழப்பு காரணமாக, எனது முக்கிய அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன். அதற்குப் பதிலாக, வரும் 12-ஆம் தேதி காலை 10:00 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன்.” என தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் மூலம் தனது நேரடி அரசியல் என்ட்ரியை அறிவிக்கப் போகிறாரா? அல்லது தனது அறக்கட்டளையின் அடுத்தகட்டப் பயணம் குறித்த அறிவிப்பா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

எனினும், திரையுலகின் மூத்த இயக்குநருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

You May Also Like

More From Author