2025ஆம் ஆண்டின் டிசம்பர் 30ஆம் நாள், உலகளவில் டெஸ்லா நிறுவனத்தின் 90 இலட்சமாவது மின்சார வாகனம், சீனாவின் ஷாங்காய் மாநகரில் உள்ள டெஸ்லா ஜிகா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இத்தொழிற்சாலையின் கட்டுமானப் பணியானது 10 மாதங்களுக்குள்ளாகவே முழுமையடைந்து 2019ஆம் ஆண்டில் தன் உற்பத்தியைத் தொடங்கியது.
உலகின் தயாரிப்பு வரலாற்றில் டெஸ்லாவின் வேகமானது சீனாவிலுள்ள சட்ட உத்தரவாதம், நிர்வாகச் செயல் திறன் போன்ற காரணிகளால் நனவாக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் எலன் மஸ்க் மதிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கால் கற்பனைத் தொழிற்சாலையாக என்றழைக்கப்படும் இந்தத் தொழிற்சாலையானது ஒரு தனி நிறுவனத்தின் வெற்றியாக அல்ல, சீனாவில் தொழில் நடத்துவதற்கான சுற்று சூழல் தொடர்ச்சியாக மேம்பட்டு வருகிறது. மேலும், இந்த சூழல் மேம்பாடு நிலையானதாக இருப்பதால், மேலதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் ஈர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
