தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மட்டும் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
தென் மாநிலங்கள் மற்றும் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
