சீன அரசுத் தலைவரின் மனைவி பங் லீயுவன், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற பிரெஞ்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட் மக்ரோன் ஆகிய இருவரும் டிசம்பர் 4ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மக்கள் கலை அரங்கத்தைப் பார்வையிட்டனர்.
இந்த அரங்கிலுள்ள நாடக அருங்காட்சியகத்தையும் அவர்கள் சுற்றி பார்த்தனர். அதே வேளையில், இந்த அரங்கின் வளர்ச்சி வரலாறு, பிரெஞ்சு நாடகத் துறையுடன் தொடர்பு நிலைமை குறித்தும் அவர்கள் அறிந்துகொண்டனர். தேநீர் வீடு எனும் நவீன நாடகத்தின் மேடை அமைப்புகளை அவர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்தனர். அங்குள்ள நாடக அரங்கில், சீனாவில் புகழ் பெறும் நவீன நாடகத்தின் ஒரு பகுதியை அவர்கள் கண்டு ரசித்து, நடிகர்களுடன் பரிமாறிகொண்டனர்.
