நெல்லை, தேனி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மற்றும் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

You May Also Like

More From Author