5வது சிஎம்ஜி உலகளாவிய ஊடக புத்தாக்க மன்றக் கூட்டத்தை முன்னிட்டு சிஜிடிஎன் உலகெங்கிலும் இணைய பயனர்களிடையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.
இதில், மனித-இயந்திர ஒத்துழைப்பு என்ற ஊடக சூழல் உருவாக்கப்படுவதோடு, ஊடகத்தில் புதிய சுற்று உற்பத்தித்திறன் மாற்றத்தை ஊக்குவிப்பதில் செயற்கை நுண்ணறிவு மேலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
அறிவார்ந்த யுகத்தில் செய்தி வெளியிடும் வழிமுறைகளில் ஆழமான மாற்றங்கள் காணப்படுகின்றன என்று 78.2 விழுக்காட்டினர் கூறினர். நாகரிகத்தை முன்னெடுத்து செல்வதிலும் கலாச்சாரத் தொடர்பை ஊக்குவிப்பதிலும் அறிவார்ந்த யுகத்தில் ஊடகங்களின் பங்கு மேலும் வலுப்படுத்தப்படும் என்று 71.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான சரிபார்ப்பு நடைமுறைகளை ஊடகங்கள் மேம்படுத்த வேண்டும் என்று 92 விழுக்காட்டினர் அழைப்பு விடுத்தனர். சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலம் ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று 91.1 விழுக்காட்டினர் வலியுறுத்தினர்.
மேலும், ஊடகங்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள உதவும் என்று 77.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
