காசா மக்களுக்கு நிம்மதி அளிக்கும்; அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு  

Estimated read time 0 min read

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிடப்பட்ட போர்ப் பகுதியிலிருந்து படிப்படியாக விலகிக் கொள்ளவும் வழிவகுக்கும், அமெரிக்கா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தத்தை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலுவான தலைமைத்துவத்தைப் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்டோபர் 9) காலை வெளியிட்ட சமூக ஊடக பதிவில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவரையும் குறியிட்டுப் பதிவிட்ட மோடி, பிணைக்கைதிகளின் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிப்பது ஆகியவை நிம்மதியைக் கொடுக்கும் என்றும், நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

You May Also Like

More From Author