நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கு கடிதம்  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ், ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோவிலில் உள்ள தனது தாத்தாவின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சந்திர குமார் போஸ் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு நாளான ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு முன்னதாக, நேதாஜியின் அஸ்தியை ரெங்கோஜியில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், “அவரது காந்த ஆளுமை, புத்திசாலித்தனம், அசாதாரண தைரியம், தன்னலமற்ற தன்மை மற்றும் இந்திய சுதந்திரத்திற்கான தளராத அர்ப்பணிப்பு ஆகியவை சுதந்திரத்தை விரும்பும் மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் அவரை நாயகனாக ஆக்கியுள்ளன.” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author