1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாக நினைவுகூரப்படுகிறது.
அன்றைய தினம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது சூளுரையைத் தொடங்கிய நாள் ஆகும். இதனை நினைவுகூரும் வகையில், அதிமுக அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், “ஏற்றிவிட்ட ஏணியை தூக்கி எறிய துணிந்த திமுகவின் தோல்வி வரலாற்றிற்கு பிள்ளையார் சுழியிட்ட நாள் இன்று” என பதிவிட்டுள்ளனர்.
“எதிர்காலம் வரும், என் கடமை வரும், இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்ற தனது பாடல் வரிகளை, வாழ்க்கை வரிகளாக மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சூளுரைத்த நாள் இன்று.
ஏற்றிவிட்ட ஏணியைத் தூக்கி எறியத் துணிந்த திமுக-வின் தோல்வி வரலாற்றிற்கு பிள்ளையார் சுழியிட்ட நாள்… pic.twitter.com/zkQ3E5DfXo
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) October 10, 2025
“>
மேலும், “எதிர்காலம் வரும், என் கடமை வரும், இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்ற எம்.ஜி.ஆர் பாடலை குறிப்பிட்டு, அதிமுக தொண்டர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, “1972 போலவே, 2025 அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் வரலாறு திரும்ப எழுதப்படுமா?” என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே தீவிரமாக எழுந்துள்ளது.