அடிப்படை கோட்பாட்டில் ஊன்றி நின்று, புத்தாக்கம் செய்ய வேண்டும் என்ற தலைப்பிலான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை டிசம்பர் முதல் நாள் ட்சியு ட்சி எனும் இதழில் வெளியிடப்படவுள்ளது.
சீன நவீனமயமாக்கப் போக்கு, அடிப்படை கோட்பாட்டில் ஊன்றி நிற்கும் வேளையில் புத்தாக்கம் செய்து வருகின்ற வரலாற்றுப் போக்காகும். சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான போக்கில் முதலில் சீன நவீனமயமாக்கத்தின் அடிப்படை மற்றும் ஊற்றுமூலத்தைப் பின்பற்ற வேண்டும். அதே வேளையில், புத்தாக்கத்தை நாட்டின் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நிலைமையின் முக்கிய இடத்தில் வைத்து, யுகத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தியதாக இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சீன தேசத்தின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடுகள் சோஷலிச சமூகத்துக்கு ஏற்றதாக இருப்பதை முன்னேற்றி, சீன தேசத்தின் தனிச்சிறப்பு மிக்க எழுச்சி சின்னத்தைக் காட்சிப்படுத்தி, சீன எழுச்சி, சீன மதிப்பு மற்றும் சீனச் சக்தியை மேலும் நன்றாக உருவாக்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுகிறது.