தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் கலவை குண்டா அணை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரக்கூடிய தொடர் மழை காரணமாக அணையிலிருந்து அதிகப்படியான [மேலும்…]
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]
தென்சீன கடல் பகுதியில் சீன கப்பல், தங்களின் படகு மீது திட்டமிட்டு மோதியதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. தென்சீன கடல் பகுதி அதிகளவில் மீன், எரிவாயு [மேலும்…]
சென்னை போரூரில் நடைபெற்ற வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் 4000 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாவை வழங்கினார். சென்னை [மேலும்…]
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்-1 வகுப்பு பாடங்களுக்கு [மேலும்…]
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடை உற்பத்தியில் பருத்தியே முக்கிய பங்கினை வகிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் [மேலும்…]