வெனிசுலாவில் கனமழைக் காரணமாக தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல் கல்லோ நகரில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கனமழை காரணமாக சுரங்கத்தின் ஒரு பாதி இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். எனினும் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெனிசுலாவில் செயல்பட்டு வரும் சட்டவிரோதச் சுரங்கங்களில் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.