ஃபுகுஷிமா முதலாவது அணு மின் நிலையத்தில் சேமிக்கப்பட்ட மாசுபட்ட நீர் கசிந்ததை ஜப்பானின் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் அண்மையில் உறுதிப்படுத்தியது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், டோக்கியோ மின்னாற்றல் நிறுவனத்தின் வலிமையற்ற நிர்வாகம் மற்றும் ஜப்பானிய அரசின் பயன் இல்லாத கண்காணிப்பின் மீதான சர்வதேசச் சமூகத்தின் கவலையை இது தீவிரமாக்கியுள்ளது என்றார்.
மேலும், சர்வதேசச் சமூகம் மற்றும் உள்நாட்டு மக்களின் நியாயமான கவலையை ஜப்பான் தரப்பு சரிவர நோக்கி, அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை நிறுத்த வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.