தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!

Estimated read time 0 min read

தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் பனி மற்றும் பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாகத் தென் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் கடும் பனி பெய்து வருகிறது. அதேபோல மற்ற பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடும் பனி மற்றும் கனமழை காரணமாக அங்கு மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து சேவைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

You May Also Like

More From Author