தூத்துக்குடியில் தேங்கியிருந்த மழைநீரின் மீது நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளிலும், குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் நால்வர் நகரை சேர்ந்த பழனியாண்டி என்பவர் சாலை ஓரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது தேங்கியிருந்த மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு பழனியாண்டி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் துடிதுடித்து முதியவர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து பழனியாண்டியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
