தன்சானிய அரசுத் தலைவராக பதவி ஏற்ற சாமிய சுருகு ஹசான் அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 6ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீன-தன்சானிய நட்புறவு நீண்டகாலமாகவும் பாரம்பரியமாகவும் இருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுறவு உயர் நிலையில் வளர்ந்து வருகின்றது. முக்கிய நலன் தொடர்பான மற்றும் முக்கிய பொது அக்கறை கொண்ட பிரச்சினைகளில் இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளித்து வருகின்றது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகள் அதிக சாதனைகளைப் பெற்றன. சீன-தன்சானிய உறவு வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்துகின்றேன். ஹசான் அம்மையாருடன் இணைந்து, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டின் சாதனைகளை நடைமுறைப்படுத்தி, சீன-தன்சானிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறேன் என்றார்.
