குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Estimated read time 0 min read

தொடர் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாகச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதனால் 6வது நாளாக அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. தடை காரணமாகச் சுறறுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

You May Also Like

More From Author