சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாள், ஹோண்டுராஸில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்க – கரீபியன் நாடுகள் கூட்டமைப்பின் 9ஆவது உச்சிமாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
சீன-லத்தீன் அமெரிக்க உறவு, உலகின் நீண்டகால மாற்றத்தைத் தாக்குபிடித்து, நியாயமான, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும், புத்தாக்கம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு வாய்ந்த புதிய காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது.
இப்பிரதேசத்தின் நாடுகளுடன் இணைந்து, சீன-லத்தீன் அமெரிக்க பொது எதிர்காலக் கட்டுமானத்தின் புதிய வளர்ச்சியை விரைவுபடுத்த சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு, சீன-லத்தீன் அமெரிக்க மன்றத்தின் 4ஆவது அமைச்சர்கள் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெறும் எனத் தெரியவந்துள்ளது.