கனமழை : ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்

Estimated read time 1 min read

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.
மேலும், 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author