பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை

பிரதமர் மோடி இன்று தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார். கடந்த 3 மாதங்களில், பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருவது இது 4வது முறையாகும்.
கடைசியாக, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் அமைந்துள்ள இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு, பின்னர் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர், கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இன்று மதியம் 2.45 மணிக்கு. மஹாராஷ்டிராவிலிருந்து, சென்னைக்கு தனி விமானத்தில் வருகிறார் பிரதமர் மோடி.

You May Also Like

More From Author