தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இந்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டம் லால்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழியில் தலா 5 செ.மீ., மற்றும் கடலூர் மாவட்டம் கே.எம்.கோயில், நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, மயிலாடுதுறை தானியங்கி வானிலை நிலையம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

You May Also Like

More From Author