அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதி அவையின் பிரதிநிதிக் குழு ஒன்று 25ஆம் நாள் சீனாவிலுள்ள பயணத்தை முடித்தது. சர்வதேச ஊடகங்கள் இதில் கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க பிரதிநிதி அவையின் பிரதிநிதி குழு சீனாவுக்கு வரும் முன், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். சீன-அமெரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் ஆகியவை குறித்து இருவரும் ஆழமாக கருத்துகளைப் பரிமாற்றி, அடுத்த கட்டத்தில் இரு நாட்டுறவு வளர்ச்சிக்கு வழிகாட்டினர்.
இந்த பின்னணியில், அமெரிக்க பிரதிநிதி அவையின் பிரதிநிதிக் குழுவின் சீன பயணம், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் தலைமை பங்கை வெளிக்காட்டியது. இப்பயணம், சமீபத்தில் சீன-அமெரிக்க உயர் நிலை பரிமாற்றத்தின் போக்கைத் தொடர்ந்து, சீன-அமெரிக்க உறவு வளர்ச்சியை நிதானப்படுத்தியது.
தற்போதைய சீன-அமெரிக்க உறவுக்காக, இந்த பயணம், இரு தரப்பும் தொடர்பு மேற்கொள்ளும் வழிமுறைகளை விரிவாக்கி, சீன-அமெரிக்க தொடர்புக்கு புதிய சாரளத்தைத் திறந்துள்ளது. அமெரிக்க பிரதிநிதி அவையின் பிரதிநிதிக் குழு சீனாவில் பயணம் மேற்கொண்ட போது,
அமெரிக்காவுடன் இணைந்து, சமநிலை, மதிப்பளிப்பு, ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது ஆகியவற்றைப் பின்பற்றி, தொடர்பின் மூலம் தத்தமது அக்கறை கொண்ட பிரச்சினையைச் சமாளிக்க சீனா விரும்புகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.