துணை ஜனாதிபதி வருகை : கோவையில் டிரோன் பறக்க 4 நாட்கள் தடை..!

Estimated read time 0 min read

துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார்.

நாளை கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் சொந்த ஊரான திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.

இந்நிலையில், கோவைக்கு நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வர உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை 4 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பூரிலும் நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author