வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘மோந்தா’ (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
இந்த புயல் இன்று மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் தாக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 27) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக, கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை பின்வரும் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது: சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை
சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
