சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் சீனத் தரப்புப் பொறுப்பாளரும், துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்கத் தரப்புப் பொறுப்பாளரும், நிதி அமைச்சருமான ஸ்காட் பெசென்ட், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர், அக்டோபர் 25, 26 ஆகிய நாட்களில் மலேசியாவின் கோலாலம்பூரில் சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு நடத்தினர்.
இவ்வாண்டு இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துக்களை வழிகாட்டலாக கொண்டு, பரஸ்பர வரி வதிப்பு, ஃபெண்டானில் மீதான வரி விதிப்பு மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு, விவசாயப் பொருட்களின் வர்த்தகம், ஏற்றுமதி கட்டுப்பாடு உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து, இரு தரப்பினரும் மனம் திறந்து கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு, அடிப்படை பொதுக் கருத்துக்களை எட்டியுள்ளனர்.
இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு அமைப்புமுறையின் பங்காற்றி, பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் தத்தமது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து நெருங்கிய தொடர்ப்பை நிலைநிறுத்தி, சீன-அமெரிக்க உறவின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
