தமிழக அரசியல் களம் புதிய ஆட்சி மாற்றத்தால் பரபரத்துக் கிடக்கும் வேளையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நீண்ட 20 நாட்கள் லீவுக்குப் பிறகு நேற்று திடீரென ரிப்பன் மாளிகைக்கு விசிட் அடித்து தனது அலுவல் பணிகளைத் தொடங்கியுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மே 10-ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மேயர் பிரியா பணிக்கு வராமல் சைலண்டாக இருந்தது கோட்டை வட்டாரத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸை உருவாக்கியிருந்தது.
கடந்த 6-ஆம் தேதியே மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணி முடிந்து வழக்கமான வேலைக்குத் திரும்பிய நிலையில், மேயர் மட்டும் 20 நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் பணிக்குத் திரும்பியுள்ளார்; அதுமட்டுமன்றி, இதுவரை அவர் புதிய முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்கவோ, அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்கவோ இல்லை என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். இதற்கிடையே, நேற்று ரிப்பன் மாளிகைக்கு வந்த மேயர் பிரியாவை, சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையாளராகப் பொறுப்பேற்றுள்ள சமீரன் ஐ.ஏ.எஸ் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது,
சென்னை உள்ளாட்சி நிர்வாகத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!
