‘Others’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், தன்னுடைய உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய ஒரு பத்திரிகையாளரை நடிகை கௌரி கிஷன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் உடல் அவமதிப்பு (Body Shaming) குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவத்தில் நடிகை கௌரி அந்த பத்திரிகையாளரை நிதானமாகவும், அதே நேரத்தில் கண்டிப்புடனும் நடத்திய விதம் ரசிகர்களிடத்திலும், திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் ஆதரவையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
உடல் எடையை பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரை ஆவேசமாக கண்டித்த கௌரி கிஷன்
