உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம்!  

நியூயார்க் நகரத்தில் இருந்து வெளியாகும் பிரபல அமெரிக்க பயண இதழான ‘Travel + Leisure, 2025’-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது.
உலகளாவிய வாசகர்களிடையே நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.80 லட்சம் பேர் பங்கேற்ற இந்த கருத்துக் கணிப்பில், 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த பட்டியலில், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) 84.23 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்துள்ளது.
இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய விமான நிலையம் இதுவாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author