சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது சுயசரிதையினை எழுதி வருவதாக அவரது வரவிருக்கும் ‘கூலி’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் 171வது படமான கூலி , தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டது.
நியூஸ் 18 இன் படி, ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தின் கடைசி இரண்டு ஷெட்யூல்களில் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தார் என்று லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டார்.
“ஒவ்வொரு நாளும், நான் அவரிடம், ‘நீங்கள் எந்த எபிசோடில் இருக்கிறீர்கள்?’ ‘நீங்கள் எந்த கட்டத்தில் இருக்கிறீர்கள்?’ என்று கேட்பேன்” என இயக்குனர் மேலும் கூறினார்.
சுயசரிதை எழுதிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்; உறுதிப்படுத்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
