விரைவில் வெளியாகும் நடிகர் ரஜினிகாந்தின் சுயசரிதை! வைரமுத்துவின் நெகிழ்ச்சி பதிவு

Estimated read time 1 min read

நடிகர் ரஜினிகாந்தை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து, ஜெயிலர் 2 படத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Image

நடிகர் ரஜினிகாந்தை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து, ஜெயிலர் 2 படத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ரஜினியின் சுயசரிதை விரைவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகும் என உறுதியளித்ததாக பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் எக்ஸ் தளப் பதிவுகள் 30 ஆயிரம் பார்வையாளர்களைக் கடப்பதே அபூர்வம். ஆனால், ரஜினியுடனான அவரது சந்திப்பு 44 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து வைரல் ஆகியிருக்கிறது. இத்தனைக்கும், ‘நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை’ என்று தான் வைரமுத்து சொல்லி இருக்கிறார்.

வைரமுத்துவின் எக்ஸ் தளத்தில், “ரஜினிகாந்த் அவர்களை

எப்போது சந்தித்தாலும்

இன்னிசை பாடும் இதயம்

எதிராளிக்கு

இன்பம் கடத்தும்

மின்சார மனிதர் அவர்

“பார்த்து நாளாயிற்று;

பார்க்க வந்தேன்;

ஜெயிலர் 2 வெற்றிபெற

வாழ்த்துகிறேன்” என்றேன்

கலை பேசினோம்;

வாழ்வியல் பேசினோம்;

ஒரு வார்த்தைகூட

அரசியல் பேசவில்லை

“எப்போது வெளிவரும்

சுயசரிதை” என்றேன்

“வேலை நடக்கிறது;

விரைவில் வெளிவரும்” என்றார்

“உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது” என்றேன்

“ஏன்?” என்றார்

“பலபேருக்கு

வரலாறு இருக்கிறது;

உங்களுக்கு வசீகரமும்

இருக்கிறது” என்றேன்

நான் சொன்னதை

மீண்டும் மீண்டும்

சொல்லிப் பார்த்துக்கொண்டார்

“முதலில்

தமிழ் ஆங்கிலம்

இரண்டிலும் வெளிவரலாம்” என்றார்

“வந்தால்

அதிகம் விற்பனையாகும்

புத்தகங்களுள் ஒன்றாய்

விளங்கும்” என்றேன்

பசுந்தேநீர்

பருகக் கொடுத்தார்

அதிலிருந்த துளசிமணம்

வீடு வரும்வரை

வீசியது நாசியில்

” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author