தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிக்கலால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தானியங்கிச் செய்தி மாற்று அமைப்பு (AMSS) பாதிக்கப்பட்டுள்ளதால், மும்பை விமான நிலையத்தின் செயல்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு
