சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது

இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கடத்தி வந்த இளைஞரை கைது செய்ய சுங்கத்துறையினர் போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கடத்தி வரப்பட்ட இந்த ஹெரோயினின் மதிப்பு பல கோடி ரூபாய்களை தாண்டும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் இது போன்ற பொது இடங்களில் தொடர் சோதனைகளும், சாலைகளில் வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author