இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து தரவுகளைச் சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 3ஆம் நாள் வெளியிட்டது. ஏப்ரல் மாதத்தில் சீனச் சரக்குப் போக்குவரத்துத் துறை வெளிப்புற அழுத்தங்களைத் தாங்கி சீரான நிதானமான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியது. இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனச் சரக்குப் போக்குவரத்தின் மொத்த தொகை 1கோடியே 15லட்சத்து 30ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டில் இருந்ததை விட, 5.6விழுக்காடு அதிகரித்தது.
கட்டமைப்பு ரீதியில் பார்த்தால், உற்பத்தி மற்றும் நுகர்வுத் தேவை நிதானமாக அதிகரித்தன. செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பு மற்றும் தொடர்புடைய தயாரிப்புத் துறையின் சரக்குப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வருகின்றன. சீனப் பொருளாதாரம் பெரும் நெகிழ்வுத் தன்மை கொண்டது என்பதை இது எடுத்துக்காட்டுவதாகச் சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் தகவல் மையத்தின் இயக்குநர் லியூ யியுஹாங் தெரிவித்தார்.