மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்  

Estimated read time 1 min read

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.
மாலியில் அதிகரித்து வரும் உள்நாட்டுக் குழப்பத்தையும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் (JNIM) மற்றும் ஐஎஸ் போன்ற தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராடி வரும் நிலையில் இந்தக் கடத்தல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, வியாழக்கிழமை அன்று கோப்ரி அருகே ஐந்து இந்தியத் தொழிலாளர்கள் துப்பாக்கி ஏந்திய சிலரால் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author