ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அல்பேனிய பிரதமர் எடி ராமா, சோஷலிஸ்ட் கட்சி கூட்டத்தில், டெல்லா (அல்பேனிய மொழியில் சூரியன் என்று பொருள்) என்ற புதிய மெய்நிகர் அமைச்சரை நியமித்ததை அறிவித்துள்ளார்.
டெல்லாவின் முதன்மைப் பணி, அனைத்து அரசு டெண்டர்களையும் மேற்பார்வையிட்டு, அந்தச் செயல்முறை 100 சதவீதம் ஊழலற்றதாக இருப்பதை உறுதி செய்வதாகும்.
இந்த ஏஐ அமைச்சர், பொது நிதி எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது என்பதில் முழுமையான வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பார்.
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா
