பிரதமர் மோடியின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பயணம் முடிந்த மறுநாளே, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், சீன அதிபர் ஜி ஜின் பிங்கை நேரில் சந்தித்தார்.
பிரதமர் மோடி பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களுக்கு எதிராகச் சீனா வெற்றி அடைந்ததன் 80-ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இதற்காகப் பாகிஸ்தான் ராணுவ தலைவர் அசிம் முனீர் சீனா சென்றுள்ளார்.தொடர்ந்து அவர் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை நேரில் சந்தித்தார்.
இருதரப்பு பிராந்திய ஒத்துழைப்பு குறித்து அசிம் முனீர், ஷெபாஷ் ஷெரிப் மற்றும் ஷி ஜின்பிங் பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.