செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வருகிற 26ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல்நாள் மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்ச்சியில் பங்காரு அடிகளாரின் உருவ சிலைக்கும், ஆதிபராசக்தி அன்னைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக நிகழ்வு ஜூலை 28ம் தேதி நடைபெறும்., அன்றைய தினம் காலை 9.15 மணிக்கு நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, வருகிற 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆக்ஸ்ட் 9ம் தேதி பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.